உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுாரில் புதிய அரசு பஸ்கள் அமைச்சர் துவக்கி வைப்பு

வடலுாரில் புதிய அரசு பஸ்கள் அமைச்சர் துவக்கி வைப்பு

வடலுார: வடலுார் பணிமனையில் தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஒய்வறை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு புதிய பஸ்கள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மாவட்ட மண்டல பொது மேலாளர் ராகவன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, ஏ.சி., ஓய்வு அறையை திறந்து வைத்து, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் வடலுார் பணிமனையில் கான்கிரீட் தரைத்தளம் அமைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கினார்.அதைத்தொடர்ந்து, சிதம்பரம் - குறிஞ்சிப்பாடி; சிதம்பரம் - திருப்பதிக்கு புதிய பஸ்களை துவக்கி வைத்தார். வடலுார் நகராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.அப்போது, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தொ.மு.ச. பொது செயலாளர் தங்க ஆனந்தன், வடலுார் சேர்மன் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்செல்வன், துணை சேர்மன் சுப்புராயலு, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், கிளை தொ.மு.ச. தலைவர் பழனிவேல், பொருளாளர் செந்தில்நாதன், அமைப்பு செயலாளர் பாலவிநாயகம், உதவி மேலாளர்கள் பரிமளம், சிவராமன், கிளை மேலாளர் மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ