வகுப்பறையில் அமர்ந்து பாடம் கவனித்த எம்.எல்.ஏ., கடலுாரில் சுவாரஸ்யம்
கடலுார் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.நிகழ்ச்சி முடிந்ததும், 8ம் வகுப்புக்கு பாடம் நடந்து கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென சென்றார். அங்கு மாணவி ஒருவர், கணக்கு படம் குறித்து சக மாணவிகளுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, மாணவியருடன் பெஞ்சில் அமர்ந்த எம்.எல்.ஏ., மாணவி பாடம் எடுப்பதை கவனித்து பாராட்டினார்.வகுப்பறையில் ஆசிரியர் இல்லாததை அறிந்த எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியையிடம் கேட்டார். அப்போது, ஆசிரியை வேறு பணிக்கு சென்றுள்ளதாக கூறியதால் கடுப்பான எம்.எல்.ஏ., தலைமை ஆசிரியை கடிந்துகொண்டார். அதையடுத்து மாற்று ஆசிரியர் ஏற்பாடு செய்து, பாடம் நடத்தப்பட்டது. சிறிது நேரம் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தவர், மாணவிகளிடம் பாடம் குறித்துகேட்டறிந்தார்.பின்னர், கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.