விருதை நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத்
விருத்தாசலம்; விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், தேசிய லோக் அதாலத் நடந்தது.முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ் முன்னிலை வகித்தார்.முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஜெயக்குமார் ஆகியோர் இரண்டு அமர்வாக வழக்கை விசாரணை செய்தனர். இதில், மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்கு, காசோலை மோசடி, வங்கி கடன் வழக்கு என 300 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 2 கோடியே 35 லட்சத்து, 89 ஆயிரத்து 200 ரூபாய் தீர்வு காணப்பட்டது. முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.