விருதை கல்லுாரியில் தேசிய கருத்தரங்கம்
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், ஆங்கில துறை சார்பில், தேசிய அளவிலான கருத்தரங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் பசுபதி முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் வளர்மதி கருத்தரங்கின் மைய கருத்தை வலியுறுத்தி பேசினார். உதவி பேராசிரியர் பிரியதர்ஷினி வரவேற்றார்.கும்பகோணம் அரசு கல்லுாரி இணை பேராசிரியர் சரவணன், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் கிரிஸ்டோபர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வளர்ந்து வரும் கலாசாரம் குறித்து சிறப்புரையாற்றினர்.கவுரவ விரிவுரையாளர் ஜெயக்குமார் தொகுத்து வழங்கினார்.கல்லுாரி அனைத்து துறை பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.கவுரவ விரிவுரையாளர் அன்னால் நன்றி கூறினார்.