உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுரை, பழனிக்கு புதிய பஸ்கள் எம்.எல்.ஏ.,-மேயர் துவக்கி வைப்பு

மதுரை, பழனிக்கு புதிய பஸ்கள் எம்.எல்.ஏ.,-மேயர் துவக்கி வைப்பு

கடலுார்,: கடலுாரில் இருந்து மதுரை மற்றும் பழனிக்கு புதிய பஸ்கள் இயக்குவதற்கான துவக்க நிகழ்ச்சி நடந்தது.கடலுார் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு,அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். மாநகராட்சிஆணையர் அனு முன்னிலை வகித்தார். அரசுபோக்குவரத்து கழக பொது மேலாளர் ராகவன் வரவேற்றார். கடலுாரில் இருந்து நெய்வேலி, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக பழனிக்கும், கடலுாரில் இருந்து விருத்தாசலம், திருச்சி, விராலிமலை வழியாக மதுரைக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.அப்போது, தொ.மு.ச., தலைவர் பழனிவேல், துணை மேலாளர் ரகுராமன், உதவி மேலாளர் பரிமளம், கிளை மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி,அருண், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், சன்பிரைட் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ