உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி., இயக்கி வைப்பு

புதிய சி.சி.டி.வி., கேமராக்கள்: எஸ்.பி., இயக்கி வைப்பு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வர்த்தக சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை, எஸ்.பி.,ராஜாராம் இயக்கி வைத்தார்.பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கத்தினர், நகரில் பழுதாகிய கேமராக்களை சீரமைத்தும், 7 இடங்களில் புதிய கேமராக்கள் வைத்தும் உள்ளனர். அதற்காக துவக்க விழா நடந்தது. வட்டார வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். கடலுார் மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட பொதுச்செயலாளர் வீரப்பன், பொருளாளர் அசரப் அலி, முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் சாலிஹ் மரைக்காயர் வரவேற்றார்.எஸ்.பி., ராஜாராம் பங்கேற்று கேமராக்களை இயக்கி வைத்து பேசுகையில், மரபு சார்ந்த புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் அளிக்க கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்காணிப்பு கேமராக்கள் மூன்றாவது கண்ணாக உள்ளது. குற்றங்களை தடுக்ககூடிய தடுப்பு அரணாகவும் உள்ளது. ஒவ்வொரு வணிக நிறுவனங்களுக்கு முன்பும், ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கும்போது இரண்டு, மூன்று போலீசார்களை பாதுகாப்பிற்கு நிறுத்துவதற்கு சமம் என்றார். விழாவில், துணைத் தலைவர் ஐய்யப்பன், செய்தி தொடர்பாளர் ரமேஷ், தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் அப்துல் முனாப், கவுன்சிலர் மாரியப்பன், நிர்வாகிகள் நடராஜன், இஸ்மாயில், ஹர்ஷ் துகார் உட்பட பலர் பங்கேற்றனர்.நகர துணை செயலாளர் கவிமதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை