உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., தொழிலாளர்கள் நிரந்தரம்: எம்.பி.,யிடம் அமைச்சர் வேண்டுகோள்

என்.எல்.சி., தொழிலாளர்கள் நிரந்தரம்: எம்.பி.,யிடம் அமைச்சர் வேண்டுகோள்

நெல்லிக்குப்பம் : கடலுார் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத், வாக்காளர்களர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்தது.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி பேசுகையில், 'நாட்டில் தமிழகத்தில் மட்டும் தான் ஒரே கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றனர். முதல்வர் ஸ்டாலின் சாதனைகளே இதற்கு காரணம். வட மாநில தலைவர்கள் ஸ்டாலினை வியந்து பார்க்கின்றனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க எம்.பி., பாடுபட வேண்டும்' என்றார். கூட்டத்தில் விஷ்ணுபிரசாத் எம்.பி., பேசியதாவது; நமது கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் இந்தியாவுக்கு எதிராக பிரதமர் மோடி எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியாத அளவுக்கு நாம் பலமாக உள்ளதே நமக்கு கிடைத்த வெற்றி. நெய்வேலியில் மீண்டும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலை பணியை விரைந்து முடிக்க பாடுபடுவேன்.2026 சட்டமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றி பெறுவோம்' என்றார். காங்., மாவட்ட தலைவர் திலகர், பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் தாமரைசெல்வன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், பேரூராட்சி செயலாளர் ஜெயமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வி.சி., மாவட்ட செயலாளர் அறிவுடைநம்பி, ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை