உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்திய ஒருவர் கைது; 2 பேருக்கு வலை

மணல் கடத்திய ஒருவர் கைது; 2 பேருக்கு வலை

கடலுார்; கடலுார் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார், ஒருவரைக் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன், நேற்று காலை திருமாணிக்குழி கெடிலம் ஆற்றங்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடுத்தடுத்து மாட்டுவண்டியில் மணல் கடத்திச் சென்ற திருமாணிக்குழியைச் சேர்ந்த விக்னேஷ்,32, திருமலை, செல்வம் ஆகியோரை தடுத்து நிறுத்தி மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர். இதில் விக்னேஷை போலீசார் கைது செய்த நிலையில், மற்ற இருவரும் தப்பிவிட்டனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை