உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓ.பி.ஆர்., நினைவு நாள்

ஓ.பி.ஆர்., நினைவு நாள்

வடலுார் : வடலுார் சுத்த சன்மார்க்க நிலைய நிறுவனமான ஓ.பி.ஆர்., 54வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கி, சுத்த சன்மார்க்க மடல் சிறப்பிதழை வெளியியிட்டார். ரெட்டி முரசு இதழ் ஆசிரியர் இளங்குமரன் பெற்றுக் கொண்டார். துணைத் தலைவர் சிவப்பிரகாச சுவாமிகள், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் ஆகியோர் முன்னாள் முதல்வர் ஓமாந்துாரார் மற்றும் மகாலிங்கம் படங்களை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் துணை ஆசிரியர் கோதண்டராமன், சுத்த சன்மார்க்க நிலைய பொருளாளர் பரவலுார் ஆசைத்தம்பி, வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமானுஜம், டி.ஆர்.எம்., கல்வி அறக்கட்டளை ராஜமாரியப்பன், சன்மார்க்க ஆய்வாளர் நந்தகோபால், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால் உட்பட பலர் பங்கேற்றனர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !