மேலும் செய்திகள்
பாதி எரிந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீஸ்
14-Sep-2024
புதுச்சத்திரம் : கடலுார் மாவட் டம், புவனகிரி அடுத்த கும்முடிமூளை ஊராட்சி துணைத் தலைவ ராக இருந்தவர் கலைமணி, 40: சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் கட்டட ஒப்பந்ததாரராக பணி செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுச்சத்திரம் அடுத்த பூவாலை குட்டியாண்டவர் கோவில் அருகே தனது ஹோண்டா காரை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார், உடலைக் கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.தற்கொலை செய்துகொண்ட கலைமணி, சென்னையில் கான்ட்ராக்ட் வேலை செய்த இடத்தில் சரியான முறையில் பணம் பட்டுவாடா செய்யாததால், மன உளைச்சலில் இருந்துள்ளார். தனது மன உளைச்சலை வீடியோவாக பதிவு செய்து நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
14-Sep-2024