தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் எதிர்பார்ப்பு; முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் பேச்சு
கடலுார்; கடலுார் தெற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெ., 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சத்திரம் எம்.ஜி.ஆர்., திடலில் நடந்தது. கூட்டத்திற்கு கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன்,, தலைமை கழக பேச்சாளர் கோவை அழகு, சிவசுப்பிரமணியன், சூரியமூர்த்தி, பக்தரட்சகன், ராஜசேகர் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம் பேசியதாவது:பொங்கலுக்கு 2.500 ரூபாய் வழங்கியவர் எடப்பாடியார். இப்போது தி.மு.க., ஆட்சியில் பொங்கலுக்கு மக்களுக்கு எந்த ஒரு பணமும் வழங்கவில்லை. தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் மக்கள் விரோத ஆட்சியை, கொலை கொள்ளை நிறைந்த ஆட்சியைப் பார்த்து மக்கள் எப்பொழுது தேர்தல் வரும் முதலமைச்சராக பழனிசாமியை தேர்ந்தெடுக்கலாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனப் பேசினார். மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.