உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

மாணவி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை

கடலுார், : பள்ளியில் மாணவி பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி, திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ௧ படித்து வருகிறார்.இவர் நேற்று 8:30 மணிக்கு பள்ளிக்கு வந்தவர், வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளார்.இதுகுறித்து சக மாணவிகள் அளித்த தகவலின்பேரில், உடன் அந்த மாணவியை சிகிச்சைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நடத்திய விசாரணையில், சரியாக படிக்கவில்லை என பெற்றோர் திட்டியதால், தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ