உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசியல் தலையீட்டால் ஓடை துார்வாரும் பணி நிறுத்தம்; 25 கிராமங்களில் வெள்ளம் பாதிக்கும் அபாயம்

அரசியல் தலையீட்டால் ஓடை துார்வாரும் பணி நிறுத்தம்; 25 கிராமங்களில் வெள்ளம் பாதிக்கும் அபாயம்

சேத்தியாத்தோப்பு அருகே விளக்கப்பாடி ஏரியில் துவங்கி முகந்தரியங்குப்பம், தட்டானோடை, தர்மநல்லுார், பெரியநற்குணம், வீரமுடையாநத்தம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஆணைவாரி ஓடை ஓடுகிறது. பெரும் மழை, கடும் வெள்ள காலங்களில் இப்பகுதி கிராமங்களில் தேங்கும் மழைநீர், இந்த ஓடை வழியாக வெள்ளாறுராஜன் வாய்க்காலில் வடிகிறது. இதனால் அப்பகுதி மழை வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படுவதில்லை.வாய்க்கால் துார்ந்ததைடுத்து, விருத்தாசலம் பொதுப்பணித்துறை சார்பில் பெரியநற்குணத்தில் துவங்கி சின்னகுப்பம் ஏரி முகப்பு வரை வடிகால் வாய்க்கால் துார்வாரப்பட்டது. சின்னகுப்பத்தில் துவங்கி ஆணைவாரி ஓடை வரை துார்வாரும்போது, அரசியல் தலையீட்டுடன், அப்பகுதியை சேர்ந்த சிலர், எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர். இதனால், நீர்வளத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு நடந்த பணி, அரசியல் தடையீட்டால் கிடப்பில் போடப்பட்டது.ஆணைவாரி ஓடை துார்வாராமல் கிடப்பில் போட்டுள்ளதால் மழைவெள்ள நீர் வடிந்து செல்லமுடியவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையில் அணைவாரி ஓடையில் தண்ணீர் தேங்கி கிராம பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து, விளை நிலங்கள் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, துார்வாரும் பணியை மீண்டும் துவக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை