மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
27-Feb-2025
புவனகிரி; புவனகிரி சவுராஷ்ட்ரா வீதி, கண்ணன் பஜனை மடத்தில், பூவராகவசாமிக்கு மண்டகப்படி உற்சவம் வரும் 18 ம் தேதி நடக்கிறது.புவனகிரி சவுராஷ்ட்ரா வீதி கண்ணன் பஜனை மடத்தில் ஆண்டு தோறும், சவுராஷ்ட்ரா சமூகம் சார்பில்,பூவராகவசாமிக்கு மண்டகப்படி உற்சவம் நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான உற்சவம் வரும் 18ம் தேதி காலை 8.00 மணிக்கு பெருமாள் எதிர் அழைப்புடன் துவங்குகிறது. மதியம் 12.00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 5.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அர்ச்சனை யும் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை புவனகிரி சவுராஷ்ட்டிரா சமுகத்தினர் செய்து வருகின்றனர்.
27-Feb-2025