ரயில் மறியல் ஒத்திவைப்பு
கடலுார்: சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக கடலுார் துறைமுகத்திற்கு வரும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சிகள், சார்பில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டது.இதுதொடர்பாக கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை தாங்கினார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மோகனப்பிரியா, டி.எஸ்.பி., பிரபு, தாசில்தார் பலராமன், தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் மாதவன், காங்., மாவட்டத் தலைவர் திலகர், துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.