மேலும் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம்
19-Aug-2024
கடலுார், : கடலுார் ஸ்ரீ சங்கர பக்த ஜன சபா சார்பில் 67வது கிருஷ்ணர், ராதா திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, கடந்த 14ம் தேதி காலை 7:00 மணிக்கு பாதுகா அபிேஷகம், காலை 8:30 மணிக்கு தோடய மங்களம் குருகீர்த்தனை, ஸ்ரீ கீதகோவிந்த அஷ்டபதிபஜனை ஆரம்பம், மாலை 4:00 மணி முதல் அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, இரவு7:30 மணி முதல் 11:00 மணி வரை தியான பூஜை, திவ்யணாமம்,டோலோத்ஸசவம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 9:00 மணிமுதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீ ராதா திருக்கல்யாண உற்சவம், ஆஞ்சநேயஉற்சவம் நடந்தது.நாகூர் ஸ்ரீ அரவிந்த் ஸ்ரீகாந்த் பாகவதர் மற்றும் குழுவினர்,உள்ளூர், வெளியூர் பாகவதர்களின் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை சங்கர பக்த ஜன சபா தலைவர் திருமலை மற்றும் நிர்வாகிகள்செய்திருந்தனர்.
19-Aug-2024