உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் 

திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் 

கடலுார் : திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் துவங்கியது.கடலுார், திருவந்திபுரம் சீனிவாசப் பெருமாள் கோவிலில் கிடாம்பி ஆச்சான் சன்னதி உள்ளது. தினமும் காலை 8:00 மணி முதல், 11:00 மணி வரையும், மதியம் 3:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையிலும் வேதபாராயணம், திவ்யபிரபந்த சேவை சாற்றுமறை நடக்கிறது.திருப்பிரதிஷ்டை நாள் உற்சவத்தையொட்டி நேற்று ஸ்ரீதேவி பூமாதேவி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ