உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை

திட்டக்குடி தாலுகா கிராமங்களை வேப்பூரில் இணைக்க கோரிக்கை

திட்டக்குடி : வேப்பூர் அருகில் உள்ள திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களை வேப்பூர் தாலுகாவுடன் இணைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திட்டக்குடி தாலுகா மற்றும் விருத்தாசலம் தாலுகாவிலிருந்து பிரிக்கப்பட்ட 53 வருவாய் கிராமங்களைக் கொண்டு பத்து ஆண்டுகளுக்கு முன் வேப்பூர் தாலுகா உருவாக்கப்பட்டது. தற்போது திட்டக்குடி தாலுகாவில் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் வேப்பூருக்கு வெகு அருகிலேயே உள்ள தொண்டங்குறிச்சி, புல்லுார், கல்லுார், ம.புடையூர், ஆவட்டி, பனையாந்துார், பாசார், சிறுகரம்பலுார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இன்னும் திட்டக்குடி தாலுகாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. திட்டக்குடியிலிருந்து 15 முதல் 20 கி.மீ., தொலைவிலுள்ள இந்த கிராமங்கள் 5 கி.மீ.,தொலைவிற்குள் உள்ள வேப்பூர் தாலுகாவுடன் இணைத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேலும், நேரடி பஸ் வசதி இல்லாததால் மக்கள் சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்காக தொலைவிலுள்ள திட்டக்குடிக்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே, வேப்பூருக்கு அருகிலுள்ள திட்டக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அருகிலுள்ள தாலுகாவுடன் இணைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை