மேலும் செய்திகள்
இரு வீடுகளில் 5 சவரன் திருட்டு
30-Jun-2025
புவனகிரி:நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த நத்தமேடு, செட்டிக்குளத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 60. கணவர் இறந்த நிலையில் சந்திரா தனியாக வசித்தார். நேற்று முன்தினம் மாலை சந்திரா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், மருதுார் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் பார்த்த போது, சந்திரா இறந்து கிடந்தார். உடலை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின்படி, அதே பகுதி பசுபதி, 27, என்பவரிடம் விசாரித்தனர். சந்திரா வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்ற பசுபதி, சந்திரா முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து, இரண்டரை சவரன் நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார். பசுபதியை போலீசார் கைது செய்தனர்.
30-Jun-2025