உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டுமான பணிக்கு தோட்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

கட்டுமான பணிக்கு தோட்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

நெல்லிக்குப்பம் : வாய்க்கால் கரையை பலப்படுத்த தோண்டிய பள்ளத்தை மூடாததால் விபத்துகள் நடக்கிறது.நெல்லிக்குப்பம் நகராட்சி தமிழ்கருமார தெருவில் இருந்து அங்காளம்மன் கோவில் தெருவுக்கு செல்லும் வழியில் வெள்ளப்பாக்கத்தான் வாய்க்கால் உள்ளது.அங்கு இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு குறுகிய பாலம் உள்ளது.அந்த பாலத்தை ஒட்டி வாய்க்காலின் கரையில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்டும் பணி நடந்தது.அதற்காக பள்ளம் தோண்டி சுவர் கட்டினர்.பணி முடிந்து பல நாட்களாகியும் பள்ளத்தை மூடவில்லை.இரவில் அங்கு போதுமான வெளிச்சமும் இல்லாததால் பாலத்தில் செல்பவர்கள் தவறி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.உடனடியாக அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ