ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி ஆசிரியர்களுக்கு பரிசு
கடலுார்: கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி சார்பில் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் நவநீத கிருஷ்ணன், இணை செயலாளர் கலிவரதன், நிர்வாக அலுவலர் குருச்சந்திரன் முன்னிலை வகித்தனர். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இமயவரம்பன் வரவேற்றார்.விழாவில், ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியின் 63ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் உரிமையாளர்கள் ஆனந்த்குமார், விஜயகுமார் மற்றும் சோனியா, ஹதீஷ், மஹாவீர் கிட்ஸ் பள்ளி தாளாளர் வந்தனா ஆகியோர் ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர்.