ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி சார்பில், மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி, பாடலீஸ்வரர், பெரியநாயகி மற்றும் உற்சவர் சந்திரசேகருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, ஆர்.எம்.மகாவீர் ஜூவல்லரி சார்பில், உரிமையாளர்கள் ஆனந்த்குமார், விஜயகுமார், அரிஹந்த், சித்தார்த் ஆகியோர் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.