மேலும் செய்திகள்
காதல் ஜோடிபோலீசில் தஞ்சம்
01-Feb-2025
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் தம்பதி தஞ்சம் அடைந்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த பாலுார் காந்தி நகரை சேர்ந்த குருநாதன் மகன் ரத்தினவேல்,26 தனியார் நிறுவன ஊழியர்.இவர் நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது அந்த பகுதியை சேர்ந்த அம்புரோஸ் மகள் மரியாவுக்கும்,25 ;காதல் ஏற்பட்டது.இதையறிந்த மரியாவின் பெற்றோர் கண்டித்தனர்.இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.நேற்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினார்.
01-Feb-2025