உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியர் தினம்

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியர் தினம்

கடலுார்; கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் சாரண, சாரணியர் தினம் கொண்டாடப்பட்டது.சாரணர் இயக்கத்தை துவங்கிய ராபர்ட் பேடன் பவுல் பிரபு பிறந்தநாளையொட்டி, சாரண சாரணியர் தினம் கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளியின் தலைவர் சிவக்குமார், கொடியேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.சாரண, சாரணியர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே, துணை முதல்வர், சாரண சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை