உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூத்த குடிமக்கள் நல கூட்டம்  

மூத்த குடிமக்கள் நல கூட்டம்  

கடலுார் : கடலுாரில் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம், உலக மகளிர் தின விழா நடந்தது.தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் வரவேற்றார்.உதவி தலைவர் விஜயலட்சுமி மகளிர் தினம் குறித்தும், ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் திருமலை உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும், பாஸ்கர் ஆன்மிக சுற்றுலாவின் அவசியம் குறித்தும் பேசினர்.60 வயது கடந்த அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ