எஸ்.கே., வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா
கடலுார் : கடலுார் எஸ்.கே., வித்யா மந்திர் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். கடல்சார் அறிவியல் துறை அனந்தராமன், குழந்தைகள் நலக்குழு இளங்கோவன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி முதல்வர் அப்துல் சுபஹான் ஆண்டறிக்கை வாசித்தார்.வகுப்பில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்கள், ஆண்டு முழுதும் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள், தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் பங்கேற்ற மாணவர்கள், கல்வி சார்ந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.