உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் ஜெ., பிறந்த நாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் மரியாதை

நெய்வேலியில் ஜெ., பிறந்த நாள் விழா தெற்கு மாவட்ட செயலாளர் மரியாதை

கடலூர்: ஜெ., 77வது பிறந்த நாளை முன்னிட்டு நெய்வேலியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி ஜெ., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம், மாநில அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் பக்தரட்சகன், செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.பின் மாவட்ட செயலாளர் ஜெ., பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆர்ச் கேட்டில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் வடக்குத்து கோவிந்தராஜ் ஏற்பாட்டின் பேரில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது.பின் வடலுார் நகர கழக செயலாளர் பாபு ஏற்பாட்டின் பேரில் செய்யப்பட்டிருந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை சொரத்துார் ராஜேந்திரன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை