எம்.ஆர்.கே., கல்லுாரியில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி
சிதம்பரம், : காட்டுமன்னார்கோவில், எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், கல்லூரி மாணவ மாணவிருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.கல்லுாரி சேர்மன் கதிரவன் வரவேற்றார். நிர்வாக அலுவலர் கோகுலக்கண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர். கடலூர் மாநில சிறுபான்மையினர் ஆணைய இயக்குனர் சங்கர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பங்கேற்று பேச்சு போட்டியை துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், போட்டியாளர்களில் தமிழுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு ஆங்கில பேச்சு போட்டியிலும் அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இதை பார்க்கும்போது, தமிழகம் இரு மொழிகளில் பலம் பெற்ற மாநிலமாக திகழ்வதை உணர முடிகிறது. கலந்து கொண்டவர்களில் மூன்றில் இரு மடங்கு மாணவிகளாக இருந்தது மகளிர் முன்னேற்ற தின விழாவாகவே தெரிகிறது என்றார்.நிகழ்ச்சியை பேராசிரியர்கள் சிவப்பிரியா, ராஜகணபதி தொகுத்து வழங்கினர். ஆசிரியர் மனோகரன் தலைமையில் ஆசிரியைகள் நடுவர்களாக பங்கேற்றனர். கல்லாரி முதல்வர் ஆனந்தவேலு, மகளிர் தின வாழ்த்துடன் நன்றி கூறினார்.