உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

பண்ருட்டி தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க.சார்பில் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது.பஸ்நிலையம் முன்பு, சரவணா தியேட்டர் அருகில் இரு இடங்களில் தெருமுனை பிரசாரம் நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.மேற்கு மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் இளையகோபால், தியாகதுருவம் ஷநவாஸ், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் புஷ்பராஜ் ஆகியோர் அரசின் சாதனைகள் குறித்து பேசினர்.இதில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிர்காமன், நகர அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, வரவேற்றனர்.மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, சோழன், ரமேஷ், ரிஸ்வான் சாதிக், லாவண்யா முத்துவேல், அருள். சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன் விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை, செந்தில்குமார் இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர் ராஜா, பார்த்திபன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை