மேலும் செய்திகள்
முருங்கப்பாக்கம் சிவன் கோவில் கும்பாபிேஷகம்
05-Feb-2025
விருத்தாசலம் : பூதாமூர் இந்திரலிங்கம் எனும் சுவர்ணகடேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.விழா, கடந்த 7ம் தேதி காலை அனுக்ஞை, கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை கோ பூஜை, நாடி சந்தானம், மகா அபிேஷகம், மூன்றாம் கால பூஜை, மகா பூர்ணாஹூதி நடந்தது.காலை 9:00 மணிக்கு மேல், சுவர்ணகடேஸ்வரர் கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் சுவர்ண கணபதி, வள்ளி தெய்வானை சமேத திருச்சோலை மலையன் சுவாமிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக திருப்பணிக்குழு மற்றும் பூதாமூர், பூந்தோட்டம், ஏனாதிமேடு பொது மக்கள், சிவனடியார்கள் செய்திருந்தனர்.
05-Feb-2025