மேலும் செய்திகள்
கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நியமனம்
18-Feb-2025
கடலுார்; கடலுார் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக இளஞ்செல்வி பொறுப்பேற்றார்.கடலுார் கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளராக ரவிச்சந்திரன் பதவி வகித்து வந்தார். இவர், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றுவிட்டார். இதையடுத்து, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் கோமதி மண்டல இணைப்பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.இந்நிலையில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக இளஞ்செல்வி நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றார். அவருக்கு கூட்டுறவு துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
18-Feb-2025