உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா

சிதம்பரம்: சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளி நிர்வாகக்குழு துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.கோவை ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி பக்தி விரதானந்த மகராஜ் ஆசியுரை வழங்கினார்.வழக்கறிஞர் இளங்குமார் சம்பத், பாலகவுதமன், பாபு, லட்சுமணன், தலைமையாசிரியர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.காமராஜ் மெட்ரிக் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவிற்கு,தாளாளர் கஸ்துாரி லட்சுமிகாந்தன் சிறப்புரை ஆற்றினார். காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் பேசினர். முதல்வர் சக்தி ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ