லட்சுமி சோரடியா பள்ளியில் ஆசிரியர் தின விழா
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா பள்ளி மற்றும் பாபுராவ் தெரு ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது.பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா வாழ்த்தி பேசினார்.சிறப்பு விருந்தினர் ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க நிறுவனர் முத்துக்குமரன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சித்ரா செய்திருந்தனர். ஆசிரியை கிருத்திகா நன்றி கூறினார்.