உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலை பல்கலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், கோரிக்கை விளக்க கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2019ம் ஆண்டு அமைக்கப்பட்ட பதவி உயர்வு தேர்வுக்குழுவை, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு அங்கீகரிப்பதுடன், தகுதி பெற்ற அனைவருக்கும் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என, வலியுறுத்தி, அண்ணாமலைநகர் பூமா கோவில் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசன், தனசேகரன், செல்லபாலு, கார்த்திகேயன், சுதாகர், வாசுதேவன், ரொனால்டுரோஸ், ராமு, பரணி, ஜான் கிருஷ்டி ராபர்ட், ராஜேந்திரன், செல்வகுமார், அஸ்கர் அலி படேல் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.பதவி உயர்வு கிடைக்காதவர்கள் எவரும் இருந்தால் சிறப்பு தேர்வுக்குழு நடத்தி இன்றைய தேதி வரை தகுதி பெற்ற அனைவருக்கும் பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை