உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம், : புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 25 ம் தேதி காலை கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கியது. இரவு 7.00 மணிக்கு முதற்கால யாகபூஜை நடந்தது. 26ம் தேதி காலை இரண்டாம்கால யாகபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனையும் மாலை 6:00 மணிக்கு மூன்றாம்கால யாகபூஜை நடந்தது. கும்பாபிேஷக தினமான நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, ரக்ஷாபந்தனம், தத்துவார்ச்சனையும் சரியாக 9:30 கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ