சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவில் அடுத்த மோவூரை சேர்ந்தவர் உத்திராபதி மகன் அழகேசன், 48; இவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனை, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, அழகேசனை கைது செய்தனர்.