பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது
நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணிடம் பணம் கேட்டு தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த செடுத்தான்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சந்திரன் மனைவி எழிலரசி, 42; இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து மகன் நித்தி (எ) மனோஜ்குமார். 22; என்பவருக்கும் முனவிரோதம் இருந்து வந்தது. மனோஜ்குமார் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்த ஜாமினில் வெளியே வந்துள்ளார். மனோஜ்குமார், அதே பகுதியில் வசிக்கும் எழிலரசியை பணம் கேட்டு மிரட்டியதுடன், தாக்கியுள்ளார். இதுகுறித்து எழிலரசி கொடுத்த புகாரின்பேரில் தெர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நெய்வேலியில் காலியாக உள்ள என்.எல்.சி., குடியிருப்புகளில் ரவுடி மனோஜ்குமார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.டி.எஸ்.பி., சபியுல்லா உத்தரவின்பேரில் தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் அங்கு சென்று அவனை பிடிக்க முயற்சி செய்தனர்.அப்போது தப்பியோடிய ரவுடி மனோஜ்குமார் வழியில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன் அவரை என்.எல்.சி., மருத்துவமனையில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.