உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடைபாதை பணி துவக்கம் தினமலர் செய்தியால் நடவடிக்கை

நடைபாதை பணி துவக்கம் தினமலர் செய்தியால் நடவடிக்கை

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் 21ம் தேதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முதல்வர் வருகைக்காக பழைய கலெக்டர் அலுவலக சாலையை விரிவாக்கம் செய்து, சாலையின் இரு புறமும் பேவர் பிளாக் கற்கள் பதித்து நடைபாதை மற்றும் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.ஒரு பகுதி நடைபாதையில் மட்டுமே கற்கள் பதிக்கப்பட்டன. மற்றொரு பகுதி நடைபாதையில் எதுவும் செய்யப்படவில்லை. முதல்வர் விழா முடிந்த கையோடு நடைபாதை மற்றும் புதிய மின் விளக்குகள் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணி மீண்டும் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை