மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு ஆலோசனை முகாம்
06-Mar-2025
புவனகிரி: புவனகிரி ஸ்வெட் தொண்டு நிறுவனம் சார்பில் கிராம அளவிலான வளரிளம் பெண்களுக்கு, கல்வி வளர்ச்சி மற்றும் பொது விழிப்புணர் குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.அலுவலக வளாககத்தில் நடந்த முகாமில் அமைப்பின் நிர்வாகி விக்டோரியா வேளாங்கண்ணி தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். புவனகிரி பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் சுய உதவிக் குழுவிகள் உள்ளிட்ட 82 பேர் முகாமில் பங்கேற்றனர்.முகாமில் மேரிகுலோத், வின்சென்ட் மேரி, ராமமூர்த்தி உள்ளிட்ட குழுவினர் பெண்களுக்கு பயிற்சி அளித்தனர்.முகாமில் டாக்டர் பேராசிரியர் அமலநாதன், குழந்தைகள் உரிமைகள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டோபர், பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கக்கூடிய வழிமுறைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.ஏற்பாடுகளை புவனகிரி ஸ்வெட் நிறுவன அமைப்பினர் செய்திருந்தனர். தொடர்ந்து மகளிர் தினம் கொண்டாடி நினைவு பரிசும் வழங்கினர்.
06-Mar-2025