உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு அலுவலர் ஒன்றிய முப்பெரும் விழா

அரசு அலுவலர் ஒன்றிய முப்பெரும் விழா

கடலுார்: கடலுார் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், சங்க அங்கீகார நுாற்றாண்டு விழா, மாவட்ட மாநாடு மற்றும் பணி நிறைவு நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.கடலுார் மஞ்சக்குப்பம் திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் மாவட்ட தலைவர் செங்கேணி தலைமை தாங்கினார்.மாநில நிர்வாகிகள் சையது அபுதாகிர், முருகபாண்டியன், சங்கீதா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முரளி வரவேற்றார்.சங்க மாநில தலைவர் அமிர்தகுமார் நுாற்றாண்டு விழா சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் முரளிதரன், சங்க நிர்வாகிகள் ஜோதி, கலைச்செல்வன், மேகவண்ணன், இளங்கோ, முருகேசன், லட்சுமி நாராயணன், சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கடலூர்-புதுச்சேரி புறவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.கடலுார்-சென்னை- இருவழி ரயில் பாதை திட்டத்தை விரைந்து முடித்து போக்குவரத்து துவக்க வேண்டும். கடலூர் பழைய கலெக்டர் அலுவலக சாலைக்கு சிவ.இளங்கோ சாலை என பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ