உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றிய அலுவலகம் முற்றுகை; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

ஒன்றிய அலுவலகம் முற்றுகை; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவிலில் ஒன்றிய அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.காட்டுமன்னார்கோவில் அடுத்த கஞ்சங்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட, கொண்டாயிருப்பு தெற்கு தெருவில், கடந்த 2023ம் ஆண்டு, ஆக., 5 முதல் 10ம் தேதி வரை 100 நாள் வேலை செய்த பயனாளிகளுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து, காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பல முறை புகார் அளித்தும், சம்பளம் தரப்படவில்லை.ஒரு ஆண்டுக்கு மேலாகியும், வேலை செய்த பயனாளிகளுக்கு இதுவரை சம்பளம் வழங்காததை கண்டித்து, மா.கம்யூ., கட்சியினர் மற்றும் பொது மக்கள் நேற்று முன்தினம் ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால், அலுவலக வாயிலில் அமர்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.அதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி சுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இம்மாதம் 4ம் தேதி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை ஏற்று, போராட்டம் கைவிடப்பட்டது.போராட்டத்தில், மா.கம்யூ., வட்டச் செயலாளர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், நகர அமைப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை