உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றிய அதிகாரி கறார் கான்ட்ராக்டர்கள் புலம்பல்

ஒன்றிய அதிகாரி கறார் கான்ட்ராக்டர்கள் புலம்பல்

கடலுார் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் அதிகாரியின் ஆட்டம் ஓவராம்.இவர், ஊராட்சிகளில் நடைபெறும் 15வது மானிய குழு நிதி பணிகள், சாலை பணி, கட்டடப் பணிகள், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், மற்றும் எம்.எல்.ஏ., - எம்.பி., க்களின் மேம்பாட்டு நிதியில் செய்யப்படும் பணிகளை செய்யும் கான்ட்ராக்டர்களிடம், கவனிக்கும் விஷயத்தில் 'கறார்' காட்டுகிறாராம். திட்டப் பணிகளை பார்வையிட செல்லும் அவருக்கு, அதே இடத்தில் கவனித்தால்தான் அங்கிருந்து நகர்வாராம். கால அவகாசம் கூட வழங்குவதில்லை. இதனால், திட்டப்பணிகள் பாதிக்கப்படுகின்றது என, கான்ட்ராக்டர்கள் தினசரி புலம்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை