மேலும் செய்திகள்
சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்
03-Aug-2024
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் திருபவித்ரோற்சவத்தை முன்னிட்டு, 1008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் 14 ம் ஆண்டு திருபவித்ரோற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு நித்தியபூஜை, புண்யாவாசனம், திருமஞ்சனம், பவித்ரங்கள் சாற்றுதல், மகாசாந்தி, 2ம் கால ேஹாமம். மாலை 5:30 மணிக்கு 3ம் கால ேஹாமம் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம், மகாசாந்தி திருமஞ்சனம், வேதபிரபந்த சாற்றுமுறை, மாலை 5:30 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு, மாலை 6:00 மணிக்கு 1008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
03-Aug-2024