பிச்சாவரம் படகு சவாரிக்கு ஆன்லைன் புக்கிங் வசதி வரவேற்பு; சுற்றுலா பயணிகள் சிரமத்தை தவிர்க்க நடவடிக்கை
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, மாங்குரோவ்ஸ் எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ளதால், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குடும்பத்துடன் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து செல்கின்றனர்.பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனக்காடுகளை சுற்றி பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், இயந்திர படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்கப்பட்டுவருகிறது. சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய வரிசையில் நின்று டிக்கெட் எடுக்கவும், படகு சவாரி செய்யவும்மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.இதனால், சுற்றுலா பயணிகளுக்கு காலவிரையமும், கூட்ட நெரிசலில் சிக்கியும் தவித்தும் வந்தனர். இதனை தவிர்க்க, சுற்றுலா பயணிகளின்வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், படகு சவாரி செய்ய ஆன் லைன் புக்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. இது, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகந்த வரவேற்பை பெற்றுள்ளது.படகு சவாரிக்கு ஆன்லைன் புக்கிங் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே புக்கிங் செய்து கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்.அதைதொடர்ந்து, அவர்களுக்கு படகு சவாரி செய்ய எந்த நேரத்திற்கு வரவேண்டும் உள்ளிட்ட அனைத்து விபரங்களும்முன்கூட்டியே தெரிந்துவிடுவதால், தற்போது, படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நேரிடையாக வந்து வரிசையில் மணிக்கணக்கில் காத்திருப்பதும், டிக்கெட்எடுக்க வரிசையில் நீண்ட நேரம் நிற்கும் நிலையும் தவிர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வந்து, படகு சவாரி செய்து வருகின்றனர். எனவே, படகு சவாரிக்கு ஆன்லைன் புக்கிங் நடைமுறை, சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இதுகுறித்து பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் பைசல் அகமது கூறுகையில், ஆன்லைன் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால், படகு சவாரி செய்ய நேரிடையாக வந்து டிக்கெட் எடுக்கும் சுற்றுலா பயணிகளின் குறைவாக காணப்படுகிறது.ஆன் லைன் மூலம் புக்கிங் செய்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முன்பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு 20நிமிடத்திற்கு முன்பு வந்தால்போதுமானது என, தெரிவித்தார்.