உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட கணவர் உடலை மீட்டுத்தர மனைவி மனு

வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட கணவர் உடலை மீட்டுத்தர மனைவி மனு

கடலுார்: வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி, கடலுார் கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் மனைவி மனு கொடுத்தார்.நடுவீரப்பட்டு அடுத்த ராணிப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் மனைவி ரஞ்சிதா, தனது இரண்டு குழந்தைகளுடன் கொடுத்துள்ள மனு;எனது கணவர், நெய்வேலியை சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி மலேசியாவிற்கு, வேலைக்கு சென்றார். அங்கு சென்று இறங்கியவுடன், ஒருவர் வந்து அழைத்து செல்வார் என கூறினர். அதன்படி, மலேசியாவில் இறங்கியவுடன் அங்கு வந்த நபர், கணவரிடம் இருந்த பணத்தையும், பாஸ்போர்ட்டையும் வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து, அங்கு இருந்தவர்களின் உதவியுடன், கூலி வேலை செய்து இந்த வாரம், ஒயிட் பாஸ்போர்ட் பெற்று வீட்டிற்கு வருவதாக கூறினார். இந்நிலையில் கடந்த வாரம் தனது மொபைல் போனை யாரோ எடுத்துவிட்டார்கள் என நண்பர்கள் மொபைல் போனில் இருந்து என் கணவர், தன்னிடம் பேசினார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி எனது கணவர் இறந்துவிட்டதாகவும், அவரை கொலை செய்துவிட்டனர் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே, தனது கணவர் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை