மகளிர் தின விழா
சிதம்பரம் : மக்கள் மருந்தகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.உலக மகளிர் தினத்தையொட்டி சிதம்பரம் மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை மற்றும் மக்கள் மருந்தகம், சிதம்பரம் இன்னரவீல் சங்கம் சார்பில், மாலை கட்டி தெருவில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.பெண்களை கவுரவப்படுத்தும் விதமாக 100 பேருக்கு ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் முகாம் நடந்தது, கேசவன், தீபக்குமார், டாக்டர் பத்மினி, முத்து நாச்சியம்மை , அனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.