உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தொழிலாளி தற்கொலை  

தொழிலாளி தற்கொலை  

புவனகிரி: தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார் அடுத்த தாழங்குடாவை சேர்ந்தவர் வேம்பு மகன் நடராஜன்,34; திருமணமாகத இவர், புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் உள்ள உறவினர் சின்னதுரை வீட்டில் தங்கி, மாடு மேய்ப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலை அதே பகுதி வயலில் உள்ள மின் கம்பத்தில் துாக்கில் இறந்து கிடந்தார். தகவலறிந்த மருதுார் போலீசார் விரைந்து சென்று, நடராஜன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, நடராஜன் இறந்தற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை