உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலியில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் கைது

நெய்வேலியில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் கைது

நெய்வேலி: நெய்வேலியில் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட மகள் உட்பட இருவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலி அடுத்த வடக்குமேலுார் கிராமத்தை சேர்ந்தவர் லுார்து மேரி, 43; கணவர் இறந்து விட்ட நிலையில், 3 மகள்கள் மற்றும் மாமனார் சின்னதுரை, 72; ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் டேவிட் பிரவீன், 27; என்பவர், லுார்து மேரியை கிண்டல் செய்துள்ளார்.இதையறிந்த லுார்துமேரியின் மகள் சரண்யா, 20; மருமகன் சிவலிங்கம் ஆகியோர் டேவிட் பிரவீனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் பிரவீன், லுார்து மேரியின் வீட்டிற்கு சென்று அவரது மகள் சரண்யா மற்றும் தாத்தா சின்னதுரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து லுார்து மேரி கொடுத்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து, டேவிட் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை