பெண்ணை தாக்கிய வாலிபருக்கு மாவு கட்டு
நெய்வேலி: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்து பெண்ணை தாக்கியவர், போலீசிடம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில், கை எலும்பு முறிந்தது. நெய்வேலி அடுத்த வடக்குமேலுாரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ) அருண், 24; சில மாதங்களுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போக்சோ பிரிவில் டவுன்சிஷிப் போலீசார் கைது செய்தனர்.சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த அருண், தன் மீது புகார் கொடுத்த சிறுமியின் தாயிடம், வழக்கு செலவு பணத்தை கேட்டு தாக்கி, மிரட்டினார். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து, அருணை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் ரோந்து சென்றபோது, நேற்று வடக்கு மேலுர் செட்டிகுளம் அருகே பதுங்கியிருந்த அருண், போலீசாரை கண்டு தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிந்தது. அவரை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்கு பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.