உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெரிய ஓடையில் மேம்பாலம் 10 கிராம மக்கள் கோரிக்கை

பெரிய ஓடையில் மேம்பாலம் 10 கிராம மக்கள் கோரிக்கை

திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் - நாவலுார் இடையே பெரிய ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக ஆவினங்குடி, கொட்டாரம், வையங்குடி, சாத்தநத்தம், நாவலுார், நிதிநதத்தம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆவினங்குடி, திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் பகுதிகளுக்கு செல்கின்றனர். கோடை மழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இரு கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிக்கப்படும். இதனால், இருபகுதி கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதுக்குளம், சிறுமுளை, பெருமுளை வழயாாக 7 முதல் 10 கிலோ மீட்டர் துாரம் சுற்றி திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம், வேப்பூர், நல்லுார் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதனால் காலவிரயம் ஏற்படுவதால் இரு பகுதி கிராம மக்கள், மாணவர்கள் கடும் அவதியடை கின்றனர். எனவே, சாத்தநத்தம் - நாவலுார் இடையே பெரிய ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை